பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-3457

  ‘கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றென’ குறுந்.69
எனவும் தாஎன்னும் உரிச்சொல் வலியும் வருத்தமும் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘செழுஞ்செய் நெல்லின்’
 
எனவும்,
 
  ‘செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’
 
எனவும்,

செழுமை என்னும் உரிச்சொல் வளனும் கொழுப்பும் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,
 

  ‘விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு’ நாலடி.159
எனவும்,
 
  ‘வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை’
புறம்.27
எனவும்,
 
  ‘நின்னுறு விழுமம் களைந்தோள்’ அகம்.170
எனவும், விழுமம் என்னும் உரிச்சொல் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்’ அகம்.82
எனவும்,
 
  ‘நனந்தலை உலகம் வளைஇ’ முல்லைப்.1
எனவும், நனவு என்னும் உரிச்சொல் களனும் அகலமும் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,