பக்கம் எண் :

456 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இது குறிப்பு உணர்த்துவனவற்றுள், தாம் ஒன்றாய் நின்று பல பொருள்
உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்கின்றது.
 

  இ-ள்: ‘கானலஞ் சிலம்பன் கொடுமை ஏற்றி’ குறுந்.145
எனவும்,
 
  ‘ஏற்றமில் லாட்டிஎன் ஏமுற்றாள்’ கலி.144
எனவும் ஏற்றம் என்னும் உரிச்சொல் நினைவும் துணிவும் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘விறந்த காப்பொடு உள்நின்று வலியுறுத்து’
 
எனவும்,
 
  ‘அவல்எறி உலக்கைப் பாடுவிறந்து’ பெரும்பாண்.226
எனவும் விறப்பு என்னும் உரிச்சொல் செறிவும் வெருவலும் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,
  ‘அமர்க்கண் ஆமான் அருநிறம் மூழ்காது
பணைத்துவீழ் பகழிப் போக்குநினைந்து கானவன்’
நற்.165
எனவும்,
 
  ‘வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டு’ அகம்.1
எனவும், பணை என்னும் உரிச்சொல் பிழைத்தலும் பெருத்தலும் ஆகிய குறிப்பு
உணர்த்தலும்,
 
  ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ புறம்.47
எனவும்,
 
  ‘கறவை கன்றுவயின் படர’ குறுந்.108
எனவும், படர் என்னும் உரிச்சொல் உள்ளுதலும் செலவும் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘தாவில் நன்பொன் தைஇய பாவை’ அகம்.212
எனவும்,