பக்கம் எண் :

472 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இஃது உரிச்சொற்கு ஆவதொரு சொற்புறனடை கூறுகின்றது.

இ-ள்: சொல்லப்பட்டனவே அன்றி அவை போல்வன பிறவுமாய் ஈறு பற்றி
உணர்த்தற்கு அடங்காது பலவாற்றானும் பரந்து வரும் உரிச்சொல் எல்லாம் பொருளைச்
சொல் இன்றியமையாக் குறைபாடு தீரப் பொருளை அதனொடு கூட்டி உணர்த்தக்
குறிப்பும் பண்பும் இசையும் பற்றித் தாம் இயன்ற நிலத்து இத்துணை என வரையறுத்து
உணரும் எல்லை தமக்கு இன்மையான் எஞ்சாமல் கிளத்தல் அரிதாகலின், அவற்றை
அறிதற்கு ஓதிய வழிகளைச் சோராமல் மிகவும் கடைப்பிடித்துப் பாதுகாவலாகிய
ஆணையின் கிளந்தவற்று இயல்பானே அவற்றையும் பகுதியுற உணர்க என்று
சொல்லுவர் புலவர் ஆகலான் யானும் அவ்வாறே கூறினேன் என்றவாறு.

ஆதலால் யானும் அவ்வாறே கூறினேன் என்பது குறிப்பு எச்சம். எனவே,
‘பெயரும் வினையும் போன்று, எனவும் ‘முன்னும் பின்னும் வருபவை நாடி’ எனவும்
யான் கூறிய நெறியைச் சேராமல் கடைப்பிடித்து, ‘எச்சொல் ஆயினும் பொருள்வேறு
கிளத்தல்’ எனவும் ‘ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல், தத்தம் மரபில்
தோன்றுமன் பொருளே’ எனவும் என்னால் தரப்பட்ட பாதுகாவல் ஆணையால்
‘கிளந்தவற்று இயலான் பாங்குற உணர்க’ என்பது இதன் கருத்து ஆயிற்று. உரிச்சொல்
எல்லாம் கூட்ட வரம்பு தமக்கு இன்மையின் கடைப்பிடித்து இயல்பானே இவற்றை
உணர்க என வினைமுடிவு செய்க.