பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-11473

  ‘உருகதிர் ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த’ புறம்.160
என-உரு-உட்கும்.
 
  ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ நற்.1
எனவும்,
 
  ‘புரைதீர் கேள்விப் புலவ ரான’
எனவும் புரை (முறையே) உயர்வும் குற்றமும்,
‘மல்லல்மார்பு அடுத்தனம் புல்லுமாறு எவனோ’

 
என- மல்லல்- வளனும்.
 
  ‘ஏகல் அடுக்கத்து இருள்அறைச் சிலம்பின்’ அகம்.52
என-ஏ-பெருக்கமும்,
 
  ‘விசும்புஉகந்து ஆடாது இரைதேர்ந்து உண்ணாது’
 
என-உகப்பு-உயர்வும்,
 
  ‘உவந்துஉவந்து- ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன்
அளைஇ’
அகம்.35
என-உவப்பு- உவகையும்,
 
  ‘பயவாக்- களர் அனையர் கல்லா தவர்’ குறள்.406
எனப் பயப்பு பயனும்,
 
  வளம்மலி யுறுக்கும் உளமி லாளரொடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ’
புறம்-190
என- இயைபு- கூட்டமும், (வளன்வலியுறுக்கும் என்பது இன்றுள்ள பாடம்)
 
  வயக்கஞ்சால் சீர்த்தி’
 
எனச் சீர்த்தி- மிகுபுகழும்,
 
  ‘இரவரல் மாலையனே’ குறிஞ்சிப்-239
என-மாலை- இயல்பும்,