| ‘துணையில் தீர்ந்த கடுங்கண் யானை’ | | எனத் தீர்தல்- விடலும், | | ‘பழுதுகழி வாழ்நாள்’ | | எனப் பழுது- பயமின்மையும், | | ‘மண்முழுது ஆண்டநின் முன்னோர்போல’ | | என முழுது எஞ்சாமையும், | | ‘வம்ப மாரியைக் கார்என மதித்தே’ | குறுந்.66 | என-வம்பு- நிலையின்மையும், | | ‘மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய்’ | கலி.56 | என மாதர்-காதலும், | | ‘புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி’ | அகம்.7 | எனப் புலம்பு- தனிமையும், | | ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்’ | பதிற்.11 | எனத் துவன்றல்- நிறைவும், | | ‘கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து’ | மலைபடு.268 | என முரஞ்சல்- முதிர்வும், | | ‘பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்’ | நற்.34 | எனப் பொற்பு- பொலிவும், | | ‘வறிதுவடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி’ | பதிற்.24 | என வறிது- சிறிதும், | | ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’ | குறிஞ்சி.8 | என எய்யாமை- அறியாமையும், | | ‘நன்றும் அரிதுற் றனையால் பெரும’ | அகம்.10 | என நன்று- பெரிதும், | | ‘நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்’ | மதுரைக்.89 | எனத் தெவு- கொள்ளுதலும், |
|
|
|