| ‘தெவ்வுப்புலம் சிதைய எய்கணை சிதறி’ | | எனத் தெவ்வு பகையும், | | ‘கழுமிய ஞாட்பினுள் மைந்துஇழந்தார் இட்ட’ | களவழி.11 | எனவும், | | ‘கழும முடித்துக் கண்கூடு கூழை’ | கலி.56 | எனவும் முறையே கழுமம்- மயக்கமும் திரட்சியும், | | ‘கருவிவானம் கதழ்உறை சிதறி’ | அகம்.4 | எனக் கருவி- பலவற்றது கூட்டமும், | | ‘கார்கோள் முகந்த கமம்சூல் மாமழை’ | முருகு.7 | எனக் காமம்- நிறைவும், | | ‘அரிமயிர்த் திரள்முன்கை’ | புறம்.11 | என அரி- ஐம்மையும், | | ‘கவவுக்கடுங் குரையள் காமர் வனப்பினள்’ | குறுந்.132 | எனக் கவவு அகத்திடுதலும், | | ‘கவர்நடைப் புரவி’ | அகம்.130 | எனவும், | | ‘கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்’ | அகம்.3 | எனவும் கவர்வு- விருப்பும் கைக்கொள்ளுதலும், | | ‘சேர்ந்துசெறி குரங்கின்’ | 170 | எனச் சேர்-திரட்சியும், | | ‘இருங்கல், வியலறைக் கிடத்தி வயிறுதின்று’ | | என வியல்- அகலமும், | | ‘துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்’ | புறம்.44 | என வய-வலியும், |
|
|
|