| ‘துயவுற்றேம் யாமாக’ | | எனத் துயவு- அறிவின் திரிவும் | | ‘பருந்திருந்து உயாவிளி பயிற்றும்’ | அகம்.19 | என உயா வருத்தமும், | | ‘உசாத்துணை’ | ந.அ.சூ.110 | என உசா- சூழ்ச்சியும், | | ‘வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்’ | நாலடி.201 | என வயா- கருப்பம் தங்கி வருத்தமுற்று நுகரப்படும் பொருள்மேல் செல்லும் வேட்கையினது பெருக்கமும், | | ‘புனிற்றா பாய்ந்தெனக் கலங்கி’ | அகம்.56 | எனப் புனிறு-ஈன்று அணிமையும், | | ‘வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர’ | நற்.210 | எனயாணர்- வாரி புதிதாகப் படுதலும், | | ‘அகன் அமர்ந்து செய்யாள் உறையும்’ | குறள்.84 | என அமர்தல்-மேவலும், | | ‘யாணது பசலைஎன் றனனே’ | நற்.50 | என யாண்- கவினும், | | ‘ஐதே காமம் யானே’ | குறுந்.21தீ | என ஐ- வியப்பும், | | ‘சேற்று நிலம் முனைஇய செங்கண் காரான் | அகம்.46 | என முனைவு-முனிவும், | | ‘வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவிசாய்த்து’ | முல்லைப்.73 | என வை- கூர்மையும், | | ‘சிலைநவில் எறுழ்த்தோள் ஓச்சி’ | | என எறுழ்- வலியும், |
|
|
|