பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-11477

இருமை- கருமையும் பெருமையும் ஆகிய குறிப்புப் பொருண்மை உணர்த்தி நின்ற
உரிச்சொற்கள்.
 
  மையில் வாண்முகம் பசப்புஊ ரும்மே’ கலி.7
எனப் பசப்பு-நிறனும்,
 
  ‘மயில்சாயல் மகள்வேண்டி’ பு.வெ.மா.உழி.21
எனச் சாயல்- மென்மையும்
 
  ‘எம்வெம் காமம் இயைவது ஆயின்’ அகம்.15
எனவெம்மை- விரும்புதலும்,
 
  கண்ணே, நோக்கி நோக்கி வாள்இழந் தனவே’ குறுந்.44
எனவாள்- ஒளியும் ஆகிய பண்புப் பொருண்மை உணர்த்தி நின்ற உரிச்சொற்கள்.
 
  ‘வாயில் தோன்றி யாழ்இசையூப் புக்கு’
 
என இசை-இசைப் பொருண்மை உணர்த்தி நின்ற உரிச்சொல்.
 
  ‘வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன’
தொல்.சொல்.289

என்ப ஆதலின், வெளிப்பட்ட உரிச்சொற்களைக் கிளந்ததனால் பயன் இன்மையின்
அவற்றை ஒழித்து, வெளிப்படாதனவற்றுள் இவை போல்வன பிற வருவன உளவேல்
அவற்றையும் இப் புறனடையானே எடுத்தோதி ஈண்டே அமைத்துக் கொள்க. 11
 

விளக்கம்
 

ஏனைய பெயர் வினைகள் போல உரிச்சொற்களைத் திணை பால் இடம் விகுதி
முதலிய கொண்டு வரையறுத்தல் இயலாததாகவே, வெளிப்பட வாராத சொற்களைப்
பழக்கத்தில் உள்ள சொற்களைக்கொண்டு விளக்கினாலும் எல்லாவற்றையும்