சோராமல் விளக்குதல் இயலாது; ஆகவே, கூறியவற்றைக்கொண்டு கூறாதவற்றையும் வழக்கும் செய்யுளும் நோக்கி உணர்க என உரிச்சொல் பற்றிய புறனடை கூறியவாறு. குறை- இன்றியமையாமை. பொருளைச்சொல் இன்றியமையாமையின் அதனைக் ‘குறை’ என்றார். இந்நூற்பா தொல்காப்பியச் சொற்படல 396 ஆம் நூற்பாவாகும். இதன் உரையில் தாம் முன்பு காட்டாத தொல்காப்பிய உரிச்சொற்களை எஞ்சாமல் அடக்கியுள்ளார். அவற்றொடு ‘படரே உள்ளல் செலவும் ஆகும்’ (தொல். சொல்.373) என்பதனையும், ‘கறுப்பும் சிவப்பும்- நிறத்துஉரு உணர்த்தற்கும் உரிய என்ப’ (தொல்.சொல்.373) என்பதனையும் கொள்க. |