பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-15483

உணர்த்தும் என்ப. அவற்றுள் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவது அல்லது நம்மனோர்க்குப் புலன் ஆகாமையின், மொழிப் பொருட் காரணம் இல்லை என்னாது ‘விழிப்பத் தோன்றா’ என்றார். அக்காரணம் பொதுவகையான் ஒன்று ஆயினும் சொல்தொறும் உண்மையின் சிறப்பு வகையான் பலவாம். ஆகலின் ‘விழிப்பத் தோன்றா’ எனப் பன்மையால் கூறினார்.

உரிச்சொல் பற்றி ஓதினாரேனும் ‘பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே’ என்பது முதல் இச்சூத்திரம் காறும் கூறிய விதிகள் எல்லாம் ஏனைச் சொற்களுக்கும் ஒக்கும் என்பது கருத்தாகக் கொள்க, மேல் பொது இலக்கணம் கூறும் பொதுவியலைச் சாரவைத்தமையான் என்க. 15

நான்காவது உரிச்சொல் இயல் முற்றிற்று.
 

விளக்கம்
 

உரை சேனாவரையர் உரையே. பிற காரணங்கள் சொல்லதிகார முதல் நூற்பாக்
குறிப்பில் உள்ளன.


சூறாவளி
 

‘எச்சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல்’ என என்னால் தரப்பட்ட
பாதுகாவல் ஆனையால் என்றார். இவ்விலக்கண விளக்கநூலுள் ‘எச்சொல் ஆயினும்
பொருள் வேறு கிளத்தல்’ என இவரால் தரப்பட்ட ஆணை யாண்டையது என்க. தாம்
செய்த நூல் முறை பற்றி உரை செய்யாது தொல்காப்பியத்தில் கிடந்தவாறே படியெடுத்து
எழுதித் தமது அறியாமையை விளக்கினார் என அறிக. ஏனையவும் ஓர்ந்து உணர்க.