இவர் கருத்துப்படி காட்டி, பாய்ச்சி முதலிய வினையெச்சங்களில் இகரமே இறந்தகாலம் காட்டும் எனவும், தூஉய், பாஅய் முதலிய வினையெச்சங்களில் இறுதி யகர மெய்யே இறந்தகாலம் காட்டும் எனவும் கோடல்வேண்டும். பகுபதங்களில் பிறவற்றையும் ஏற்றபெற்றி பகுத்துப் பகுபத உறுப்பிலக்கணம் கூறிக்கொள்க. |