பக்கம் எண் :

44 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கழிப்பி- கழி+ப்+இன்+உ
                     கழி-பகுதி; உகரம் வினையெச்சவிகுதி.
                          அது திரிந்து இகரமாம்.
                     கழி+ப்+ப்+இ- (இ-வி)

வாழ்ச்சி- வாழ்+-ச்+சி
                     வாழ்- பகுதி; சி- தொழிற்பெயர் விகுதி;
                     ச்-சந்தி.

செய்தி- செய்+தி
                     செய்- பகுதி; தி-தொழிற்பெயர் விகுதி.

செய்யுள்- செய்+உள்
                     செய்- பகுதி; உள்- தொழிற்பெயர்விகுதி.

தோற்றரவு- தோன்று+அரவு- (தோற்றம் என்னும் பொருட்டு)
                     தோன்று- பகுதி; அரவு-விகுதி.

வாரானை- வா+ஆனை
                     வா- பகுதி; ஆனை-விகுதி.

வாராமை- வா+ர்+ஆ+மை
                     வா- பகுதி; மை- எதிர்மறை விகுதி;
                     ஆ- எதிர்மறை இடைநிலை; ரகரம் எழுத்துப்பேறு.

வழீஇ- வழுவு+இன்+உ
                     வழுவு- பகுதி; உ- வினையெச்ச விகுதி;
                     உகரம் இகரமானது விகாரம்.
                     வழுவு+இ- (இ-வி)

தூஉய்- தூ+இன்+உ
                     தூ-பகுதி; உ- வினையெச்ச விகுதி.
                     தூ+ய்- (இ.வி)