வந்த-முதலிய சொற்கள், வினை முற்றாகவும் பெயரெச்சமாகவும் வரும். இருவழியும் ‘அ’ என்பதே விகுதி.‘வாழிய’ முதலிய சொற்கள் வியங்கோள் வினைமுற்றாயின் யகரம் விகுதி. ‘இ’- சாரியை; வினை யெச்சமாயின் ‘இய’ என்பது விகுதி. வண்ணாத்தி:- வண்ணாரம்+இ எனப் பிரியும். வாரா, தாரா:- ஆ-விகுதி. அதுவே எதிர்மறை காட்டும். ர்- எழுத்துப்பேறு. இல்லாத- ஆகாரச்சாரியையோடு சேர்த்து இல்லா பகுதி; த் எழுத்துப்பேறு; அகரம் விகுதி என்க. |