முதலிய சொல்லிசையளபெடைகள் தூவி, உடுத்து, குழுமி என்ற சொற்களாகிய செய்து என்னும் எச்சத் திரிபாகலின், இவற்றை முறையே (தூவு+இன்+உ) (உடுத்து+ இன்+உ) (குழுமு+இன்+உ) முதலிய பகுதி, இடைநிலை, வினையெச்ச விகுதிகளாகப் பிரித்து விகுதியும் இடைநிலையின் னகரமும் கெட்டு முடிந்தனவாகக் கொள்க. ‘வம்மின்’ என்பதை வா+மின் எனப் பகுத்திடுக. ‘செய்’ என்பது செய்யாய், என்பதன்கண் ஆய் ஈறு கெட ஏற்பட்ட ஏவல்வினையெனக் கொள்க. பகுதியே ஏவல் வினையாகும் என்பர் சிலர். வாரானை, தோற்றரவு, செய்யுள், கோட்பாடு, பண்பாடு முதலிய தொழிற்பெயர்களை ஆனை, அரவு. உள், பாடு, ஆடு என்பன விகுதிகளாய்க்கொண்டு பகுத்திடுக. |