பக்கம் எண் :

பகுபத-உறுப்பிலக்கணம்41

ஓடுதி, பாடுதி முதலியவற்றில் ஓடு, பாடு முதலியன பகுதி. இகரம் முன்னிலை ஒருமை
வினைமுற்றுவிகுதி. அதுவே எதிர்காலம் காட்டுதலின், தகரஒற்று இடைநிலையாகாது
எழுத்துப் பேறு எனப்படும். உண்ப என்பது, பலர்பால் வினையாயின் உண்+ப என்றும்
பலவின்பால் வினையாயின் உண்+ப்+அ என்றும் பிரித்தல் வேண்டும். அவற்றுள், ‘ப்’
என்பது எதிர்கால இடைநிலையாகும்.

‘ஆடிய கூத்தனும் வந்தான்; அவனோடு கூடிய கூத்தியும் வந்தாள்’ என்ற
தொடரில், ‘ஆடிய’ என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமாதலின்
அதனை ஆடு+இய என்று பிரித்து விகுதியே எதிர்காலம் காட்டுவதாகக் கொள்க.
‘கூடிய’ என்பது பெயரெச்சமாதலின் (கூடு+ இன்+அ) எனப்பிரிக்க. இன்- இறந்தகால
இடைநிலை. ‘வெய்து’ என்பது குறிப்பு வினைமுற்றாயின் அதனை வெம்மை+து என்று
பிரித்து முடிக்க. ‘உண்டு’ என்பது குறிப்பு வினை முற்றாயின் (உள்+து) என்றும், அது
வினையெச்சமாயின் (உண்+ட்+உ) என்றும் பிரிக்க.

‘உடுக்கை’ என்பது தொழிற்பெயராயின் ‘கை’ விகுதி, பொருட்பெயராயின், ‘ஐ’
விகுதி.

‘ஈதல்’ முதலியன வியங்கோள் வினையாயின் ‘அல்’ விகுதி; தொழிற்பெயராயின்,
‘தல்’ விகுதி.

‘உண்டான்’ என்பதில் உண்- பகுதி; உண்பித்தான் என்பதில் உண்பி- என்பது
பகுதி; உண்பிக்கச் செய்தான் என்பதில் உண்பிக்கச்செய் என்பது பகுதி அலமந்தான்,
தெருமந்தான், பருவந்தான், புறந்தந்தான், அல்லாந்தான், செம்மாந்தாள், பொச்சாந்தான்,
கொணர்ந்தான், அழுக்கற்றான் என்பனவற்றில் அலமா, தெருமா, பருவா, புறந்தா,
அல்லா, செம்மா, பொச்சா, கொணா, அழுக்கறு என்பன பகுதி, தூஉய், உடீஇ, குழீஇ