பக்கம் எண் :

40 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எதிர்மறை இடைநிலைகள்:-

  ஆ, ஏ, அல், இல் முதலியன.
இவற்றுள், வினைமுற்றுக்கள் பலவற்றுள் ஆகாரம் புணர்ந்து கெட்டதென்க.
செய்யாது (வினைமுற்றாயின்) செய்+ஆ+து,
(வினையெச்சமாயின்) செய்+ஆ+த்+உ;
த்- எழுத்துப்பேறு.

உண்ணேன்- உண்+ஏ+ஏன்- ஏகாரம் புணர்ந்து கெட்டது. இதன்கண் ஆகாரம்
புணர்ந்து கெட்டது என்பர் சிலர்.

உண்ணலன்- உண்+அல்+அன்- அல் எதிர்மறை இடைநிலை.

இல் என்ற எதிர்மறை இடைநிலை வருமிடத்துப் பெரும்பாலும் காலம் காட்டும் இடைநிலை அதன் முன் வரும்.
 

  உண்டிலன்- உண்+ட்+இல்+அன்
உண்கின்றிலன்- உண்+கின்று+இல்+அன்
உண்கிலன்- உண்+க்+இல்+அன்
அறிகலாதார்- அறி+க்+அல்+ஆ+த்+ஆர்
க்-சந்தி; ஆ சாரியை; த்-எழுத்துப்பேறு
 

இடைநிலைகளேயன்றி விகுதிகளும் காலம் காட்டுதலும் உண்டு.

கு, டு, து, று; கும், டும், தும், றும்,; ப, மார், இ, மின் என்ற விகுதிகளும், க, ய, அர், அல், ஆல், இல் என்ற வியங்கோள் விகுதிகளும் எதிர்காலம் காட்டுவன. இவற்றையுடைய வினைச்சொற்கள் இடைநிலை யின்றிறே வரும்.

எ-டு:

உண்கு, உண்கும், உண்ப, உண்மின்.