இது முற்கூறிய எழுவகைத்திணைக்கு உரிய காமப் பொருள்
உணர்த்துகின்றது.
இ-ள் கைக்கிளையும் ஐந்திணையும் பெருந்திணையும் முறையானே
ஒருதலைக்காமமும், ஒத்தகாமமும் ஒவ்வாக் காமமும் ஆகிய
காமப்பகுதிகளைப் பொருந்துதல் உடையனவாம் என்றவாறு.
எனவே, அகத்திணை விகற்பம் ஆகிய ஏழனுள்ளும், அகம்
எனச்சிறப்பித்துச் சொல்லப்படுவன ஐந்திணையே என்பதூஉம், ஏனை
இருதிணையும் அத்துணைச் சிறப்புடைய
அல்ல என்பதூஉம் கூறியவாறாயிற்று என்பது.