இஃது எழுவகைத்திணையும் இத்துணைப்பகுதியான் இவ்வாறு கூறப்படும்
என்கின்றது.
இ-ள் மேல் காமப்பகுதிக்கு உரிமை கூறிய அகத்திணை ஏழும்
நாடகவழக்கும் உலகியல்வழக்கும் என்னும் இருபகுதியானும் சங்கம்
மரீஇயினாரை உள்ளிட்ட சான்றோர் பாடலுள் பயின்று தொன்றுதொட்டு
வரும் இயல்பில் திரியாது கூறப்படும் என்றவாறு.
ஈண்டு நாடகவழக்கு என்றது, எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும்
உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப்
புனைந்துரை வகையால் கூறும் நாடக இலக்கணம்போல, யாதானும் ஒரோவழி
ஒருசாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும்