இது, மேல் ஐந்திணை என்றவற்றின் பெயரும் முறையும் கூறுகின்றது.
இ-ள் குறிஞ்சியும் பாலையும் முல்லையும் மருதமும் நெய்தலும் மேல்
"ஐந்திணை" எனக கூறிப்போந்தவற்றிற்குப் பொருந்திய பெயராம் என்றவாறு.
முதற்பொருள் முதலிய மூன்றும்கொண்டே இவ்வைந்திணையாம் என
மேற்கூறுப ஆதலின், இவற்றிற்கு இப்பெயரும் முறையும் முறையானே
கருப்பொருள்பற்றியும் உரிப் பொருள்பற்றியும் ஆயினபோலும் என்பது.
அற்றேல், கருப்பொருள் பலஅன்றே? அவற்றுள் குறிஞ்சி முதலாயினவற்றால்
பெயர்பெற்றது என்னைஎனின்,