இது, மேல் குறியீடு எய்திய ஐந்திணையும் இப்பொருட் பகுதிபற்றித்
திணையாம் என்கின்றது.
இ-ள் மேல் குறிஞ்சி முதலிய குறியீடு எய்திய ஐந்திணையும்
முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் என முறையானே
பாடலுள் பயின்றவாற்றான் ஒன்றின் ஒன்று சிறந்தமை கருதுதல்உடைய
பொருள் மூன்றானும் திணை ஆதல் கருதப்படும் என்றவாறு.
கருப்பொருள் தோற்றுதற்கும் உரிப்பொருள் நிகழ்தற்கும் காரணமாய்
முதல் நிற்றலின் முதற்பொருள் என்றும்,அம்முதற்பொருளால் தோன்றுதல்
பற்றிக் கருப்பொருள் என்றும், இவை இரண்டினும் சிறந்து திணைக்கு
உரித்தாய் நிற்றலின் உரிப்பொருள் என்றும் ஆயின என்பது. ஒன்றின்
ஒன்று சிறத்தலாவது முதலில் கருவும் கருவில் உரியும்