அகத்திணையியல்-நூற்பா-8,9                              109


 

 சிறந்து வருதலாம். உம்மையான், மூன்றானும் அவற்றுள் சிலவற்றானும்
 நுவலப்படும் எனக்கொள்க. உதாரணம் மேல் பெறப்படும்.              8

 விளக்கம்

     உரை நச்சினார்க்கினியத்தை ஒட்டியது          தொல்.  பொ. 3

ஒத்த நூற்பாக்கள்

     "முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
     நுவலுங் காலை முறைசிறந் தனவே
     பாடலுள் பயின்றவை நாடுங் காலை."             தொல். பொ. 3
     முதல்கரு அணைந்த உரிப்பொருள் அகமே".         த. நெ.வி.2]
     முழுதும்.                                           ந. அ. 7
     முதல்கரு உரிப்பொருள் மூன்றா கும்மே".         மு. வீ. அக. 6
                                                             8

முதற்பொருள் வகைகள்

 381 நிலனும் பொழுதும்என முதல்இரு வகைத்தே.

     இது, நிறுத்த முறையானே முதற்பொருள் இத்துணைப் பகுதித்து
  என்கின்றது.

     இ-ள் நிலமும் பொழுதும் என முதற்பொருள் இரண்டு கூற்றினை
  உடைத்தாம் என்றவாறு

விளக்கம்

     நிறுத்தமுறை - சென்ற நூற்பாவில் நிறுத்தியமுறை.

ஒத்த நூற்பாக்கள்

     "முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
     இயல்புஎன மொழிப இயல்புஉணர்ந் தோரே"      தொல். பொ. 4

     முழுதும்                                            ந. அ. 8