இது, மேற்கூறிய நிலன் என்னும் முதற்பொருள் இத்துணைப் பகுதித்து
என்பதூஉம், அப்பகுதிகளுள் இப்பகுதி இத்திணைக்கு உரித்து என்பதூஉம்
கூறுகின்றது.
இ-ள் வரையும் சுரமும் காடும் பழனமும் கடலும் அவ்வவற்றைச் சார்ந்த
இடனும் ஆகிய பத்து வகையினை உடைத்தாம் முற்கூறிய நிலன் என்னும்
முதற்பொருள். அங்ஙனம் கூறப்பட்ட பகுதிகள் குறிஞ்சி முதலாகிய நடுவண்
ஐந்திணைக்கும் பொருந்தும் பகுதிக்கண்
முறையானே இரண்டிரண்டு உரியனவாம் என்றவாறு.
அவற்றுள்,