112                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

  எனத் தொல்காப்பியனாரும் பாலைக்கு நிலன் உடன்பட்டதும் நோக்குக.

ஒத்த நூற்பாக்கள்

     "மாயோன் மேய காடுறை உலகமும்"
     சேயோன் மேய மைவரை உலகமும்
     வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
     வருணன் மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
     சொல்லிய முறையான் சொல்லவும் படுமே".        தொல். பொ. 5

     "வரையே ..... நிலன்அலை                            ந. அ. 9
     "பொருப்பே வெம்பரல் புறவொடு பழனம்
     பரப்புஅமை வாரி குறிஞ்சிமுதல் பாகே"              த.நெ.வி. 3
     வரையே வனமே சுரமே மருதம்
     திரையே அவைஅவை சேர்தரும் இடனே."            தொ.வி.174
                                                      மு.வீ.அக.9
                                                             10

பொழுதின் பாகுபாடு

  383 பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா
       இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே.

     இது மேற்கூறிய பொழுது என்னும் முதற்பொருளின் பாகுபாடு
  உணர்த்துகின்றது.

     இ-ள் மேல் சொல்லப்பட்ட பொழுது என்னும் முதற்பொருள் பெரும்
 பொழுது என்னும் சிறுபொழுது என்றும் இரண்டு பகுதியினை உடைத்து
 என்றவாறு.

விளக்கம்

  "மேற்கூறிய" என்றது இவ்வியல் ஒன்பதாம் நூற்பாவினை.