இது நிறுத்த முறையானே பெரும்பொழுது இப்பகுதித்து என்பதூஉம்.
அப்பகுதிகள் இக்கால வரையறைய என்பதூஉம் உணர்த்துகின்றது.
இ-ள் கார்முதலாக வேனில் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறு பகுதியினை
உடைத்தாம் பெரும்பொழுது. அங்ஙனம் பகுதிப்பட்ட பெரும்பொழுதின்
ஆறுவகைகள்தாம் கால உரிமை எய்திய ஞாயிற்றிற்கு உரிய சிங்கஓரை
முதலாக, இரண்டுஇரண்டு ஓரையாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை
ஈறாக வந்து முடிவனவாம் ஆராயுங்காலத்து என்றவாறு. 12