114 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
எனவே, ஆவணிபுரட்டாசி-கார்; ஐப்பசி கார்த்திகை-கூதிர்; மார்கழி தை - முன்பனி; மாசிபங்குனி-பின்பனி; சித்திரை வைகாசி-இளவேனில்; ஆனி ஆடி- முதுவேனில் எனக்கொள்க.
ஒத்த நூற்பாக்கள்
"கூதிர் வேனில் கொழுங்கார் ஒழிபனி, வேனில் முன்பனி மெய்உயர் பொழுதே". த. நெ. வி. 4 "காரே .... ...... பெரும் பொழுதே". ந. அ. 11 "பருவம்கார் கூதிர்பனி முன்பின் வசந்தம் எரிமுதிர் வேனில் என்றிரு மூன்றே" தொ. வி. 166 "பருவம் காரே கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் ஆறே" மு. வீ. அக. 11 "ஆவணி முதலா ஆடிஈ றாக இரண்டிரண் டாக ஏற்கும் என்ப". 12 12
சிறு பொழுதின் வகைகள்
385 மாலை யாமம் வைகுறு என்றா காலை நண்பகல் எற்பாடு என்றா அறுவகைத்து என்ப சிறுபொழுது அவைதாம் படுசுடர் அமையம் தொடங்கி ஐஇரு கடிகை அளவைய காணுங் காலே.
இது, மேற்கூறிய சிறுபொழுது இப்பகுதித்து என்பதூஉம், அப்பகுதிகள் இத்துணைக் கால வரையறைய என்பதூஉம் கூறுகின்றது.
இ-ள் மாலையும் இடையாமமும் வைகுறுவும் காலையும் நண்பகலும் எற்பாடும் என்ற ஆறுபகுதியினை உடைத்துச் சிறுபொழுது என்று கூறுவர் ஆசிரியர். அங்ஙனம்