அறுவகைப்பட்ட சிறுபொழுதுகள்தாம், அத்தம் சென்று அடைந்த
ஞாயிற்றினது அமையம் தொடங்கி ஒரோஒன்று பப்பத்து நாழிகை அளவை
உடையனவாம் ஆராயுங் காலத்து என்றவாறு.
உதயம்தொடங்கி அதன்வழி உதயம்காறும் ஒருவாரமாம் அன்றே?
அதன் அமையத்தைக் காலஉரிமை எய்திய ஞாயிற்றின்மேல் ஏற்றிப்
"படுசுடர் அமையம்" என்றும், "வைகுறு விடியல் மருதம்" (தொல். பொ. 8)
என ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதிய "வைகுறு விடியல்" என்பதற்குப்
பொருள் காணாது அதனை ஒருபொழுதாகவும் கொண்டார்,