118                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     "இருள்நிலை உச்சி மாலை வைகறை
     பொருள்நிலை அந்தி புணர்க்கும் பொழுதே".         த. நெ. வி. 5
     "பொழுதென மாலைக்கு எழுயாமம் வைகறை
     எல்தோற்றம் நண்பகல் எற்பாடென ஆறே".          தொ. வி. 173
     "மாலைக்கு உரிமை மலர்தல்உற் பலம்புள்
     சோலைசேர்ந்து ஒலித்தல் சுரபி கரைதல்
     துன்அடைத் தாமரை சுளித்தெனக் கூம்பல்
     கன்னடம் காம்போதி கனியப் பாடலே".               தொ. வி.173
     "யாமத்து உரிமை ஆகரி பாடரி
     பூமன் சகோரம் உவரி உவத்தலே
     காமம் அநிதகம் கரவுஎன்று இவையே".                      ""
     "வைகறைக்கு உரிமை வாரணம் கூவல்
     மெய்யெனக் கனாஉறல் மீன்ஒளி குன்றல்
     வாமமீன் உதித்தல் மாதவர் வாழ்த்தல்
     இராம கலியுடன் இந்தோளம் பாடலே".                      ""
     "விடியற்கு உரிமை விலங்கொடு மற்றுஉயிர்
     கடிமகிழ்ந்து எழுச்சி கானொடு கமலம்
     விரிபூ மலர்தல் வெண்பனி துளித்தல்
     தெரிபூ பாளம் தேசாட்சி பாடலே".                          ""
     "நண்பகற்கு உரிமை நயத்தல் கோகம்
     வெண்தேர் ஓடல் மேதிநீ ராடல்
     பண்டுஇசை சாரங்கம் பாடல் என்பவே".                     ""
     "எற்பாட்டு உரிமை எற்பால் நிழல்நீளல்
     வானம் சிவத்தல் மறியினம் குதித்தல்
     கானமாய்க் காபி கல்யாணி பாடலே".                        ""
     "மாலை யாமம் வைகறை எற்பாடு
     நண்பகல் சிறுபொழுது ஐவகைத்து ஆகும்."          மு. வீ. அக.13                                                               13