120                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     கூதிர் வேனில் என்பனவற்றோடு முன்பனிபின்பனிகளைச் சாரக் கூறாது
 பிற்படக்கூறினார், இவை அவைபோலச் சிறந்தன அல்ல என்பது
 உணர்த்துதற்கு என்க.                                          14

 விளக்கம்

     திணை     பெரும்பொழுது     சிறுபொழுது
     குறிஞ்சி     கூதிர், முன்பனி     யாமம்
     பாலை     வேனில், பின்பனி     நண்பகல்
     முல்லை     கார்     மாலை
     மருதம்      ஆண்டுமுழுதும்     வைகுறு, விடியல்
     நெய்தல்     ஆண்டுமுழுதும     எற்பாடு

ஒத்த நூற்பாக்கள்

     "காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
     கூதிர் யாமம் என்மனார் புலவர்."                 தொ. பொ. 6 

     "பனிஎதிர் பருவமும் உரித்து எனமொழிப."                 " 7

     "வைகுறு விடியல் மருதம் எற்பாடு
     நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்."                   " 8

     "நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
     முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே"                 " 9

     "பின்பனி தானும் உரித்துஎன மொழிப".                    " 10

     "கூதிர் யாமம் முன்பனி என்றுஇவை
     ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும்".                     ந. அ. 13

     "வேனில் நண்பகல் பின்பனி என்றுஇவை
     பான்மையின் உரிய பாலை தனக்கே"                      " 14

     "மல்குகார் மாலை முல்லைக்கு உரிய".                     " 15

     "இருள்புலர் காலை மருதத்திற்கு உரித்தே"                 " 16

     "வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே".                   " 17

     "மருதம் நெய்தல் என்று இவை இரண்டற்கும்
     உரிய பெரும்பொழுது இருமூன் றும்மே".                   " 18