"கார்காலத்து உரிமை கார்கால் உருட்டிய
வாடையே கோபம் மயிலே கேகயம்
கோடல்செங் காந்தள் கொன்றைகூ தாளம்
தண்டிமில் உயவை தளவுகடப் பஞ்சனி
வெண்குருந்து அலர்தலே வியங்கம் கிளிகுயில்
நீங்கலே நீர்மலர் ஏங்கல் என்ப." தொ. வி. 167
"கூதிர்க்கு உரிமை கூதிரே குருகே
ஓதிமம் குரண்டம் ஒண்மதிச் சகோரம்
முதுவலை ஞெண்டுஊரும் நத்து வத்தல்
நீரே தெளிதல் நீர்மீன் சனித்தல்
காரே சூல்கொளல் பாரிசா தம்சந்து
ஆரம் பித்திகை அந்தாரம் நாணல்
முற்றவந் துலத்தலே மற்றுயிர் நைதலே". " 168
"முன்பனிக் குரிமை துன்பனிக் கடல்தரும்
கொண்டல் வீசலும் கூண்டசை சிதகன்
மண்டிருள் கூகைகூன் மனம்மலிந்து ஒலித்தலும்
மாந்தரு சாமந்தம் மலர்தலும் இலந்தை
தீங்கனி உதிர்தலும் தீஎனக் குன்றி
காய்த்தலும் நெல்லொடு கரும்புமுற் றலுமாம்". "169
"பின்பனிக்கு உரிமை பேசுங் காலை
உலவை வீசலே உளபல புறவினம்
வலிதுகூஉய்க் கான வாரணம் களித்தலே
கோங்குஇலவு அலர்தலே குரவம் நெடும்பனை
தீங்கனி உதவலே சிதப்பரி வெடித்தலே". "170
"வசந்தத்து உரிமை வசந்தன் தேர்எனும்
தென்றலே வண்டினம் சிறுகிளி பூவை
அன்றிலே குயில்இவை அகம்மகிழ்ந்து ஆர்த்தலே