122                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     மாங்கனி உதிர்தலே தேங்கய மலரொடு
     வகுளம் தாழை வழைசெண் பகம்பிற
     முகிழினிது அவிழ்தலே முன்கா ரிடைக்களி
     மிகுவன் மயில்முதல் மெலிதலே என்ப"             தொ. வி. 171

     "வேனிற்கு உரிமை கானில் தூசுஎழக்
     கோடையே வீசக் குறுகப் பேய்த்தேர்
     காடையே வலியான் கம்புள் காகம்
     சிரவம் ஒலித்தல் பகுண்டி சிந்துரம்
     பாடலம் பூத்தல் பாலைக் கனியொடு
     கோடரம் நாவல் குலிகம் காய்த்தலும்
     நீர்அலகல் மற்றுயிர்சீர் அலசிச் சேறலே".                 " 172

     "காரும் மாலையும் காட்டிற்கு உரிய".             மு. வீ. அக. 14

     "கூதிரும் யாமமும் குறிஞ்சிக்கு உரிய".                     " 15

     "பனிஎதிர் பருவமும் உரியது ஆகும்"                      " 16

     "வைகுறு விடியல் மருதக்கு உரிய"                         " 17
     "எற்பாடு நெய்தற்கு உரியது ஆகும்"                       " 18

     "நண்பகல் வேனில் நடுத்திணைக்கு உரிய."                 " 19

     "பின்பனி தானும் உரித்துஎனப் படுமே"                    " 20

     "மருதம் நெய்தல் என்று இவை இரண்டற்கும்
     உரிய பெரும்பொழுது இருமூன் றும்மே".                   " 21

     "வாடைஅடித்தல் மயில்கே கயப்புள்
     இந்திர கோபம் எழுந்துஅகம் மகிழ்தல்
     அன்னம் கிளிமயில் அகன்று வருதல்
     காந்தள் கொன்றை காயா மலர்தல்
     கமலம் ஏங்கல் கார்காலக்கு உரிய".                       " 22
     "கூதிர் உயவை வீசல்கொக் கொடுவால்
     அன்னம் சங்கு மகிழ்வுறல் உதகம்
     தெளிதல் மீன்இனம் செனித்தல் முகில்குழாம்