சூல்கொளல் சிறுசண் பகம்பாரி சாதம்
மலர்தல் மானவர் வருந்துதல் கூதிர்க்
காலக்கு உரிமையாம் காணுங் காலே". மு. வீ. அக. 23
"கோடை வீசல் கூகையும் ஆந்தையும்
மகிழ்தல் செவ்வந்தி மாமரம் மலர்தல்
இலந்தை பழுத்தல் இக்குநெல் முதிர்தல்
முன்பனிக்கு உரியவாம் மொழியுங் காலே". " 24
"வீங்குஉல வைக்கால் வீசல் கான்கோழி
புறவம் மகிழ்தல் பொங்கரும் கோங்கும்
மலர்தல் பேர்ஈந்து மடல்பனை பழுத்தல்
பின்பனிக்கு உரியவாம் பேசுங் காலே". " 25
"தென்றல் அடித்தல் தேன்குயி லோடே
அன்றிலும் மகிழ்தல் மாங்கனி உதிர்தல்
மயில்மகிழ்ந்து ஆடல் மலர்தல் புனலின்
தாழை வசந்தம் தனக்குஉரிய ஆகும்". " 26
"கானல் தோன்றல் கால்கோடை வீசல்
வலியான் காடை வான்பாடி மகிழ்தல்
மல்லிகை பாதிரி மலர்தலும் பிறவும்
முதிர்வேனிற்கு உரியன மொழியுங் காலே". " 27
"குவளை மலர்தல் குருகுஇனம் ஒலித்தல்
கன்றை உள்ளிக் கறவை போதரல்
வனசம் கூம்பல் மாலைக்கு உரிய". " 28
"கூகை சகோரம் குழுமிஉள் மகிழ்தல்
கடல்நீர் பொங்கல் களவுமேம் படுதல்
யாமக்கு உரிமைய ஆகும் என்ப". " 29
"வைகறைக்கு உரியவான் மீன்ஒளி மழுங்கல்
வெள்ளி முளைத்தல் வாரணங் கூவுதலே" மு. வீ. அக.30