இது, நிறுத்தமுறையானே கருப்பொருள் இத்துணைப் பகுதித்து
என்கின்றது.
இ-ள் தெய்வம் முதலாகத் தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு
வகையினை உடைத்தாம் மேற்கூறிப் போந்த கருப்பொருள் என்றவாறு. 15
நிறுத்தமுறை - 8 ஆம்நூற்பாவில் நிறுத்தியமுறை;
ஆரணங்கு - நிலத்தெய்வம்;
உயர்ந்தோர் - தலைமக்கள்;
அல்லோர் - பொதுமக்கள்;
"தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப". தொல். பொ. 18
முழுதும் ந. அ. 19
"தெய்வம் மானிடம் செய்தி உணவோடு
எய்திய இசைவிலங்கு இன்னன பிறவும்
பொய்தீர் கருஎனப் புகன்றனர் கொளலே". த. நெ. வி. 6