பொதுவகையால் கூறிய கருப்பொருள்பகுதி பதினான்கினையும்
சிறப்புவகையால் திணைக்குஉரிமை எய்துவிப்பான் புகுந்தவற்றுள்,
இது, முறையானே குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் இவை
என்கின்றது.
இ-ள் வெற்றியை உடைய முருகவேள் ஆகியதெய்வம் முதலாகச்
சுனையாடல் ஆகிய தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு பகுதியும்
குறிஞ்சித்திணைக்குச் சிறந்த கருப்பொருளாம் என்றவாறு. 16