தெய்வம்-முருகன்
தலைமக்களுள் ஆடவர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன்
தலைமக்களுள் மகளிர் - குறத்தி, கொடிச்சி
பொதுமக்களுள் ஆடவர் - குறவர், கானவர்
பொதுமக்களுள் மகளிர் - குறத்தியர்
பறவைகள் - கிளி, மயில்
விலங்குகள் - புலி, கரடி, யானை, சிங்கம்
ஊர்ப்பெயர் - சிறுகுடி
நீர்நிலை - அருவி, சுனை
பூக்கள் - வேங்கை, குறிஞ்சி, காந்தள்
மரங்கள் - ஆரம், தேக்கு அகில், அசோகம், நாகம்
உணவுகள் - மூங்கில்நெல், மலைநெல், துவரை, தினை
பறை - தொண்டகம்
யாழ் - குறிஞ்சியாழ்
பண் - குறிஞ்சிப்பண்
தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல்,
தேன்கூடுகளை அழித்தல், வள்ளி முதலிய கிழங்குகளை அகழ்ந்து
எடுத்தல், அருவிகளிலும் சுனைகளிலும் நீராடுதல்.