அகத்திணையியல்-நூற்பா-16                               127


 

    அரிமாச் சிறுகுடி அருவி அகன்சுனை
    ஆரம் தேக்குஅகில் அசோகம் ஐவனம்
    உணாத் தொண்டகம்தினை ஓம்பல் குறிஞ்சியாழ்
    குறிஞ்சிக் கருப்பொரு ளாம்குறித் திடினே?         மு. வீ. அக. 34

16

பாலைக் கருப்பொருள்கள்

 389  கன்னி விடலை காளை மீளி
      இன்னகை எயிற்றி எயினர் எயிற்றியர்
      மறவர் மறத்தியர் புறவுபருந்து எருவை
      கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு
      குழிவறுங் கூவல் குராஅ மராஅ
      உழிஞை பாலை ஓமை இருப்பை
      வழங்குகதிக் கொண்டன செழும்பதிக் கவர்ந்தன
      பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
      பகல்சூறை யாடல் பாலைக்கருப் பொருளே.

    இது முறையானே பாலைத்திணைக்கு உரிய கருப்பொருள் இவை
 என்கின்றது.

    இ-ள் சயமடந்தையாகிய தெய்வம் முதலாகச் சூறையாடல் ஆகிய
 தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு பகுதியும் பாலைத்திணைக்குச்
 சிறந்த கருப்பொருளாம் என்றவாறு.                                17

 

 விளக்கம்

    முறை-ஏழாம் நூற்பாவில் நிறுத்திய முறை
    தெய்வம்-துர்க்கை
    உயர்மக்கள்-விடலை, காளை, மீளி, எயிற்றி
    பொதுமக்கள்-எயினர், மறவர், எயிற்றியர், மறத்தியர்
    பறவைகள்-புறவு, பருந்து, எருவை, கழுகு
    விலங்கு - செந்நாய்
    ஊர்ப்பெயர்-குறும்பு