நீர்நிலை-குழிவறண்ட கூவல்
பூக்கள்-குரா, மரா
மரங்கள்-உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு-வழிப்பறி, ஊர்களுக்குள் சென்று கொள்ளையடித்துக் கொணர்ந்தன
பறை-பகைத்துடி
யாழ்-பாலையாழ்
பண்-பஞ்சுரம்
தொழில்-வெஞ்சமம், பகல் சூறையாடல்
முழுதும் ந. அ. 21
சிறிதுதிரித்து முழுதும், தொ. வி. 177
"ஓதிய வேனி லொடுபின் பனிஅகில் வெம்பரலே
தீதியல் வேடர் கலைஒள் விடலைதிண் பாலைஅத்தம்
கோதியல் செந்நாய் பருந்தொடு கொம்பனை யார்ப்பிரிதல்
வாதியல் கன்னி குறும்பர்வெம் பாலை மடவரலே" வீ. 94
"விமலை காளை விடலை மீளி
எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர்
எருவை பருந்து செந்நாய் குறும்புஉழிஞை
இருப்பை கூவல் இரும்பதி கவர்தல்
பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்
பகற்சூறை யாடல் பாலைக்கருப் பொருளே". மு. வீ. அக. 35
390 நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல்
வடுஇல் கற்பின் மனைவி கிழத்தி
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர்
கான வாரணம் மான்முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
|
|
|
|