130                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    பூக்கள்-குல்லை, முல்லை, தோன்றி, பிடவம்
    மரங்கள்-கொன்றை, காயா, குருந்து
    உணவுகள்-வரகு, சாமை, முதிரை
    பறை-ஏறுகோட்பறை
    யாழ்-முல்லையாழ்
    பண்-சாதாரி

    தொழில்-சாமை வரகு இவற்றை விதைத்தல், களை பிடுங்குதல், அரிதல்,
 கடாவிடுதல், குழல் ஊதுதல், ஆன் எருமை ஆடு இவற்றை மேய்த்தல்,
 பாய்ச்சல் காளையைத் தழுவுதல், குரவைக்கூத்தாடுதல், காட்டாற்றில்
 குளித்தல் என்பன.

ஒத்த நூற்பாக்கள்

    முழுதும்                                           ந. அக. 22

    சிறிதுதிரிந்து முழுதும்.                             தொ. வி. 178

    "காடுகார் மாலை இடையர் முதிரைகான் யாறுமுல்லை
    நீடுமால் கொன்றை நிரைமேய்த்த லோடு நெடுங்குருந்தம்
    கேடில்கார் தோன்றி சிறுபான் கிழத்தி மனைஇருத்தல்
    நீடுசேர் புன்கு பிறவும்முல் லைத்திணை பெண்கொடியே"    வீ. 94

    "திருமால் குறும்பொறை நாடன் செம்மல்
    இல்லாள் கிழத்தி இடையர் இடைச்சியர்
    ஆயர் ஆய்ச்சியர் அடவி வாரணம்
    மான்முயல் பாடி வரும்ஆறு அகன்சுனை
    கொன்றை காயா குருந்தம் முல்லை
    சாமை வரகு தாம்உடன் விதைத்தல்
    ஏற்றுப்பறை முல்லை யாழ்சா தாரி
    முல்லைக் கருப்பொருள் ஆம்என மொழிப"        மு. வீ. அக. 36

18

மருதக் கருப்பொருள்கள்

    

 391 இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்
     கெழுதரு கற்பின் கிழத்தி மனைவி
     உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர்