132 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
மரங்கள்-காஞ்சி, வஞ்சி, மருதம் உணவுகள்-செந்நெல், வெண்ணெல் பறை-நெல்அரிகிணை, மணமுழவு யாழ்-மருதயாழ் பண்-மருதம்
தொழில்-விழா அயர்தல், வயலில் களைநீக்குதல், நெல் அரிதல், கடாவிடல், குளங்களிலும், யாறுகளிலும் முழுகுதல் என்பன;
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் ந. அ 32 சிறிதுதிரித்து முழுதும். தொ. வி 179 "பொற்றா மரைஇந் திரன்பொய்கை பூந்தார் பழனஞ்செந்நெல் வற்றா எருமை வளர்பனி நீர்நாய் வடமகன்றில் தெற்றா மனைஊடல் ஊரன் கடைசியர் செங்கழுநீர் சுற்றா மருதத் திணையிலுண் டாவன தூமொழியே" வீ. 95 "இந்திரன் ஊரன் எழில்மிகு கிழவன் மனைவி கிழத்தி உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர் கம்புள்வெண் குருகு எருமை நீர்நாய் எழில்பெரு மூதூர் ஆறுமனைக் கிணறு இலஞ்சி தாமரை மன்றல் முழவம் மருதயாழ் மருதம் செந்நெல் வெண்ணெல் திருவிழா அயர்தல் மருதக் கருப்பொரு ளாம்வழுத் திடினே" மு. வீ. அக. 37
19
நெய்தற் கருப்பொருள்கள்
392 வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன் பரும அல்குல் பரத்தி நுளைச்சி நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர் அளவர் அளத்தியர் அலைகடல் காக்கை சுறவம் பாக்கம் பெறல்அரும் பட்டினம்