மரங்கள்-புன்னை, ஞாழல்
உணவுகள்-மீன், உப்பு இவற்றை விற்றுப்பெற்றன
பறை-மீன்கோட்பறை, நாவாய்ப்பறை
யாழ்-விளரியாழ்
பண்-செவ்வழி
தொழில்-மீன் உப்புப்படுத்தல், மீன் உணக்கல், அதனைத்தின்னவரும் பறவைகளை வெருட்டுதல், மீன்உணங்கல் விற்றல், கடலாடுதல் முதலியன;
முழுதும் ந. அ. 24
சிறிது திரித்து முழுதும் தொ. வி. 80
"மீனே கடல்பனி கொண்கன் திமிலம் விளரிநிலாக்
கானே தரும்புன்னை கண்டல் அன்னம்சுறாக் காதல்உப்பு
வானோர் வருணன் முதலைநுளையர் இரங்கல்கைதை
தேனே தருமொழி யாய்அந்தில் நெய்தல் தேர்ந்தறியே". வீ. 96
ஐவகை நிலக்கருப்பொருள்களையும் பற்றித் தமிழ்நெறி விளக்கம் கூறுமாறு.
"முருகனும் இரவியும் மாயனும் வேந்தனும் வருணனும் ஆக வகுத்தனர் கொளலே". த. நெ. வி. 7
"வெற்பன் குறவர், விடலை எயினர் ஒற்கம்இல் குறும்பொறை நாடன், குடவர், மகுணன் உழவர், சேர்ப்பன் பரதவர், இனையன பிறவும் மக்கள் பெயரே". 8
|
|
|
|