அகத்திணையியல்-நூற்பா-20                               135


 

செயல்

    "நிறைத்தேன் அழித்தலும், நெறிச்சென்று அலைத்தலும்
    ஒருக்குஇனம் ஓம்பலும், உழவொடு பயிறலும்,
    திரைக்கடல் சேறலோடு இனையன செயலே".         த. நெ. வி. 9

உணவு

    "தினையே தருப்பணம் முதிரை செந்நெல்
    விலைகோள் இனையன மேவிய உணவே".                    10

இசை.

    "முருகுஇயம் குறிஞ்சி, துடியே பஞ்சுரம்,
    பெருகிய ஏறங் கோட்பறை தாரம்,
    பல்லியம் மருதம், அழப்பறை செவ்வழி,
    சொல்லிய பிறவும் சொற்றவற்று இசையே".                    11

மரம் முதலியன

    "வேங்கை காந்தள் சீயம் மயிலே,
    பாங்கர் மராமரம் செந்நாய் பருந்தே,
    குருந்தே முல்லை இரலை புறவே,
    காஞ்சி கழுநீர் மேதி அன்னம்,
    கைதை முண்டகம் கராமே கம்புள் என்று,
    எய்திய பிறவும் இயம்பிய விலங்கே".    "" 12
    "திரைநீர் வருணன் சேர்ப்பன் புலம்பன்
    பரத்தி நுளைச்சி பரதர் பரத்தியர்
    நுளையர் நுளைச்சியர் அளவர் அளத்தியர்
    பாக்கம் பட்டினம் வாயசம் சுறவம்
    உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
    கண்டகம் கைதை முண்டகம் அடம்பு
    மீன்உப்புப் படுத்தல் விளரியாழ் செவ்வழி
    நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
    நெடுநீர் நெய்தல் கருப்பொரு ளாகும்".            மு. வீ. அக. 38