"முதற்பொருள் கருப்பொருள்" (8) என்பது முதல் "புணர்தலும்
பிரிதலும்" (21) என்பது ஈறாகக் கிடந்த சூத்திரங்களால் போந்தன:
பொதுவகையான் முதற்பொருள் முதலிய மூன்றும் கொண்டும் அவற்றுள்
சிலகொண்டும் ஐந்திணையும் ஆம் என்பதூஉம்; சிறப்புவகையான் வரையும்
வரைசார்ந்த இடனும் ஆகிய நிலனும், இருள் தூங்கித் துளி மிகுதலானும்
பனியானும் சேறல் அரிதாகலானும், பானாள் கங்குலின் பரந்து உடன்
வழங்காது மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலின் காமக்குறிப்புக்
கழியவே பெருகுதலானும், காவல்மிகுதி நோக்காது வரும் தலைவனைக்
குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால் தலைவிக்கு இன்பம் பெருகுதலானும்
கூதிர்க்காலமும், அதனைத் தொடர்ந்த முன்பனிக்காலமும், அவற்றிடை
இடையாமமும் என்னும் காலமும் ஆகிய முதற்பொருளும்,
அந்நிலத்து வாழும் குறவர் முதலாயினோர் குழீஇ வேண்டிய
வேண்டியாங்கு எய்தும்பொருட்டு வெறி அயர்ப ஆகலின் ஆண்டு
வெளிப்படூஉம் முருகவேளும் முதற்பொருள் பற்றித்தோன்றும் ஏனைக்
கருப்பொருளும், புணர்தலும் புணர்தல்நிமித்தமும் ஆகிய உரிப்பொருளும்,
ஒன்றற்கு ஒன்று பொருத்தம் உடையவாய்க் குறிஞ்சித் திணையைச்
சிறப்பித்து நிற்றலின் அவை அதற்குச் சிறந்தன என்பதூஉம்;
சுரமும் சுரஞ்சார்ந்த இடனும் ஆகிய நிலனும், காலையும் மாலையும்
நண்பகல் அன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி நீரும்
நிழலுமின்றி நிலம் பயன் துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பம்
இன்றித் துன்பம் பெருகுவது ஒரு காலம் ஆதலின் இன்பத்திற்கு இடையூறு
ஆகிய பிரிவிற்கு முதிர்வேனில்காலமும், அதனிடை நண்பகலும்,
18