இளவேனில் காலத்துப் பொழில் விளையாடியும் புதுப்பூக்கொய்தும்
அருவி ஆடியும் முன்னர் விளையாட்டின் நிகழ்ந்தமைபற்றிப் பிரிந்த
கிழத்தி மெலிந்து உரைக்கும் கிளவி பயின்று வருதலானும்,
உடன்போக்கின்கண் அக்காலம் இன்பம் பயக்கும் ஆதலானும்
இளவேனிற்காலமும் அதனிடை நண்பகலும், அவ்வேனிலைத் தொடர்ந்த
பின்பனிக் காலமும் அதனிடை நண்பகலும் என்னும் காலமும் ஆகிய
முதற்பொருளும்,
அந்நிலத்து வாழும் மறவர் முதலாயினோர் குழீஇ விறல் மேன்மேல்
கிளைப்பப் பெறல்அரும் உயிப்பலி பேணலின் ஆண்டு வெளிப்படூஉம்
சயமடந்தையும், முதற்பொருள் பற்றித் தோன்றும் ஏனைக்கருப்பொருளும்,
பிரிதலும் பிரிதல்நிமித்தமும் ஆகிய உரிப்பொருளும், ஒன்றற்கு ஒன்று
பொருத்தம் உடையவாய்ப் பாலைத்திணையைச் சிறப்பித்து நிற்றலின் அவை
அதற்குச் சிறந்தன என்பதூஉம்;
காடும்காடு சார்ந்த இடனும் ஆகிய நிலனும், வெப்பமும் தட்பமும் மிகாது
இடைநிகர்த்ததாகி ஏவல் செய்துவரும் இளைஞருக்கு நீரும் நிழலும்
பயத்தலானும், ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் கவின்சிறந்து
மாவும் புள்ளும் துணையொடு இன்புற்று விளையாடுவன கண்டு, வினைவயின்
பிரிந்து பாசறையினின்றும் விரைபரித்தேர்