ஊர்ந்து மீளும் தலைவற்குக் காமக்குறிப்பு மிகுதலானும் கார்காலமும்,
புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றில்
புகுதரவும், தீங்குழல் இசைப்பவும், பந்தர்முல்லை வந்து மணம் கஞற்றவும்
வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக்குறிப்புச் சிறத்தலின்
அக்காலத்து மாலைப்பொழுதும் என்னும் காலமாகிய முதற்பொருளும்,
அந்நிலத்து வாழும் கோவலர் குழீஇ "ஆகுதி பயக்கும் ஆபல காக்க"
எனக் குரவை தழீஇ மடைபல கொடுத்தலின் ஆண்டு வெளிப்படூஉம்
நெடுமாலும், முதற்பொருள் பற்றித் தோன்றும் ஏனைக் கருப்பொருளும்,
ஒன்றற்கு ஒன்று பொருத்தம் உடையவாய் முல்லைத்திணையைச் சிறப்பித்து
நிற்றலின் அவை அதற்குச் சிறந்தன என்பதூஉம்;
பழனமும் பழனம் சார்ந்த இடனும் ஆகிய நிலனும், பரத்தையிற் பிரிந்த
தலைவன் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் பொழுது கழிப்பிப்
பிறருக்குப் புலனாகாமை மீளும் காலம் அது ஆகலானும், தலைவிக்கும்
கங்குல்யாமம் கழியாது நெஞ்சுஅழிந்து ஆற்றாமை மிகுதலான் ஊடல்
உணர்த்தற்கு எளிதாவதோர் உபகாரமுடைத்து ஆகலானும் வைகுறுவும்,
இனித்தலைவி விடியற்குக் காலம் சிறுவரைத்தாகலின் அதனால் பெரும்பயன்
இன்று என முனிந்து வாயில் அடைத்து ஊடல் நீட்டிப்பவே,
அவ்வைகுறுவழித் தோன்றிய விடியற்கண்ணும் இவன் மெய்வேறுபாடு
விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியலும் ஆகிய
சிறுபொழுதும், பெரும்பொழுது ஆறும் என்னும் காலமும் ஆகிய
முதற்பொருளும்,
அந்நிலத்து வாழ்வோர் பலரும் குழீஇ ஊடலும் கூடலும் ஆகிய
காமச்சிறப்பு நிகழ்தற்கும் மழை வளம் தருதற்கும் விழா எடுத்தலின் ஆண்டு
வெளிப்படூஉம் ஆடலும்