அகத்திணையியல்-நூற்பா-21                               141


 

    கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
    முளைதருபு ஊட்டி வேண்டுகுளகு அருத்த
    வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னிப்
    பரூஉஉறைப் பல்துளி சிதறிவான் நவின்று
    பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்
    புயல்ஏறு உரைஇய வியல்இருள் நடுநாள்
    விறல்இழைப் பொலிந்த காண்புஇன் சாயல்
    தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதைப்
    படாஅ ஆகும்எம் கண்என நீயும்
    இருள்மயங்கு யாமத்து இயவுக்கெட விலங்கி
    வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
    பெருமலை விடர்அகம் வரவுஅரிது என்னாய்
    வரவுஎளி தாக எண்ணுதி அதனால்
    நுண்ணிதின் கூட்டிய படுமாண் ஆரம்
    தண்ணிது கமழும் நின்மார்பு ஒருநாள்
    அடைய முயங்கேம் ஆயின் யாமும்
    விறல்இழை நெகிழச் சாய்தும் அதுவே
    அன்னை அறியினும் அறிக அலர்வாய்
    அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
    வண்டுஇறை கொண்ட எரிமருள் தோன்றியொடு
    ஒண்பூ வேங்கை கமழும்
    தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே.                   அகநா. 218

    இது தோழி தலைமகளை இடத்து உய்த்துவந்து பகற்குறி நேர்ந்த
 வாய்பாட்டானே தலைமகனை வரைவு கடாயது; இம்மணிமிடைபவளத்தும்,

    வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
    உருவக் குதிரை மழவர் ஓட்டிய
    முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
    அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்
    சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய