சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை (ஒண்தளை) பரிந்து
கூர்முள் வேலி கோட்டினின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டுஊது பனிமலர் ஆரும் ஊர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
உறைஇறந்து ஒளிறும் தாழ்இருங் கூந்தல்
பிறழும் ஒருத்தியை எம்மனைத் தந்து
வதுவை அயர்ந்தனை என்ப அஃதுயாம்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறுஉடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎம்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே. அகநா. 46