அகத்திணையியல்-நூற்பா-21 145
நாளும் நாளும் ஆள்வினை அழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ்என ஒண்பொருட்கு அகல்வர் நம் காதலர் கண்பனி துடைஇனித் தோழி நீயே. (சிற்றெட்டகம்)
இது வற்புறுத்து ஆற்றியது; உரிப்பொருள் ஒன்றுமே வந்த பாலை,
திருநகர் விளங்கும் மாசில் கற்பின் அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நின்னுடைக் கேண்மை எவனோ முல்லை இரும்பல் கூந்தல் நாற்றமும் முருந்துஏர் வெண்பல் ஒளியும்நீ பெறவே.
இது பொருளிற் பிரிந்தோன் சுரம் நினைந்து உரைத்தது; முதற்பொருள் இன்றி வந்த முல்லை.
கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி இளையர் ஏவ இயங்குபரி கடைஇப் பகைமுனை வலிக்கும் தேரொடு வினைமுடித் தனர்நம் காதலோரே.
இது வந்தார் என்று ஆற்றுவித்தது; முதலும் கருவும் இன்றி வந்த முல்லை.
பூங்கொடி மருங்கின் எங்கை கேண்மை முன்னும் பின்னு மாகி இன்னும் பாணன் எம்வயி னோனே.
இது வாயில் மறுத்தது; உரிப்பொருள் ஒன்றுமே வந்த மருதம்.
அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
19