154                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

   ஐந்திணைபற்றி வீரசோழியஉரை (சூ. 92-96) கூறுவன பின்வருமாறு:

குறிஞ்சி நடையியல்

     அறிந்தோர் ஆய்ந்த அன்புதரு வகையின்
     குறிஞ்சி நடைஇயல் கூறுங் காலை
     அரிவைக்கு ஆகிய இறைவியை வர்க்கம்
     தெரிமணிப் பூணான் தெரியச் செப்பலும்
     நன்னலம் புகழ்தலும் நாணினம் அழுங்கலும்
     பொன்அவிர் பூவையைப் புணர்ப்பது உரைத்தலும்
     பிரிவுநனி கருதலும் பிரிவின்மை பேசலும்
     பெருமை செய்தலும் பெறற்கரிது என்றலும்
     ஊழ்வினை வலித்தலும் உறுதெய்வம் பேணலும்
     தோழனை நினைத்தலும் அகறலும் அணுகலும்
     இடத்தொடு புலம்பலும் ஏழையை வினவலும்
     மடத்தகு சாயல் மாதரைக் காண்டலும்
     அனம்புலம்பு அகற்றலும் ஆர்வ நோக்கமும்
     குவளைஉண் கண்புதைத்துத் தலைவி இறைஞ்சலும்
     ஆற்றான் மொழிதலும் அஞ்சியல் நோக்கமும்
     ஏற்ற உவகையோடு இனியவள் முறுவலும்
     ஆங்கவன் புணர்தலும் அவ்வயின் புணர்ச்சியைப்
     பாங்கற்கு உணர்த்தலும் பழிஎனக் கூறலும்
     தேங்கமழ் தாரோன் தெரியான் செப்பலும்
     கிளைஞன் கழறலும் கேடெனக் கூறலும்
     இளையவன் வடிவும் இடமும் ஈதலும்
     அண்ணல் கவற்சிக்கு அவள்வடிவும் இடனும்
     திண்ணிதின் செப்பலும் சென்றுஅவன் காண்டலும்
     வெறிகமழ் கோதை மிகுநலம் புணர்தலும்
     அறிவும் நிறையும் அண்ணலை எய்தலும்
     வேறிடம் காட்டலும் இலங்கிழை உணர்தலும்
     ஊறன்றா முடிவில்தன் பாங்கற் கூட்டமும்,
     தையல் தளர்ச்சியை நோக்கித் தோழி