நற்றாய் செவிலி என்றிவர் நன்னுதற்கு
உற்றதை அறியாது நற்றிறம் படர்தலும்
கட்டுரை கூட்டலும் கேட்டவள் கூற்றும்
ஒட்டிவெறி அயர்தலும் ஒண்ணுதல் அழுங்கலும்
இவ்வியல் அன்னைக்கு உணர்த்துக என்றலும்
அவ்வியல் ஒட்டாள் மொழிதலும் ஆயிடைப்
பூத்தரு புணர்ச்சியும் புனல்தரு புணர்ச்சியும்
காப்பரும் புனத்துக் களிறுதரு புணர்ச்சியும்
தாய்தரு புணர்ச்சியும்
கூறிய தாயது குறப்புவழி மொழிதலும்
வரைந்துநனி புகுதலும் வரைவுஅவர் மறுத்தலும்
கரைந்ததற்கு இரங்கலும் கவற்சி தீர்தலும்
எதிர்கொளல் மொழிதலும் ஏற்றுமகள் மொழிதலும்
நிரவிய இயற்கையோடு இன்னவை பொருளே.