தோன்றக் கூறிய தோம்அறு கற்பும்
     அன்புறு செவிலி பின்செல வலித்தலும்
     சென்றவள் வினவலும் கண்டோர் தெருட்டலும்
     ஒன்றிய உள்ளமொடு உவந்துஅவள் மீண்டலும்
     வறுஞ்சுரம் கடந்தவர் வளநாடு புகுதலும்
     பிறங்குபுகழ்ப் புதல்வரைப் பெறுதலும் பெற்றோள்
     இருங்கிளை மருங்கின் தூது விடுத்தலும்
     ஒருங்க வருந்தலும் உவந்துடன் சென்றலும்
     மாதரைக் கொண்டுதன் வாழ்பதி புகுதலும்
     ஓதிய அனைத்தும் உரியவை புக்கபின்
     பொருள்வயின் பிரிதலும் அப்பிரிவு உணர்த்தலும்
     இருள்புரி கூந்தல் இற்றுஎன மொழிதலும்
     ஆற்றான் ஆதலும் அதுகேட்டு மொழிதலும்
     கூற்றம் கொளீஇய உலகியல் உரைத்தலும்
     பின்னைப் பிரிதலும் பெருஞ்சுரத்து அழுங்கலும்
     நனிபகர் பள்ளியின் நயந்துசெலவு அழுங்கலும்
     பரத்தையின் பிரிவொழித்து எல்லாப் பிரிவும்
     உரைக்குங் காலை உணர்ந்தனன் நோக்கே.