அவற்றுள், அங்கியற் பொருளாவது அந்நிலத்தின் அங்கமாம் பொருள்
எனக்கொள்க. அவையாவன: குறிஞ்சி நிலத்துச் சந்தனமும் பொன்னும்
வெள்ளியும் முதலிய; நெய்தல் நிலத்து உப்பும் இப்பியும் நந்தும் அலவனும்
வலையும் முதலிய; பாலைநிலத்துச் சீழ்குநாயும் குருவியும் சிள்வீடும்
அறுபுள்ளியும் கோம்பியும் முதலாயுள்ளன; மருத நிலத்துக் கரும்பு வாழை
தெங்கு முதலாயுள்ளன; முல்லை நிலத்துப் பூவையும் பூனையும் தும்பியும்
காவளையும் கார்போகியும் முதலாயுள்ளன.
திணைநிலைப்பொருள் 92-96 நூற்பாக்களில் சொல்லப்பட்டன. இனி,
வன்புலப் பொதுப்பொருளும் மென்புலப் பொதுப்பொருளும்
பெருமைப்பொதுப்பொருளும் விருந்துப் பொதுப்பொருளும் ஆமாறு: